ஊழியர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் – ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை நாம் வென்றெடுக்கும் பட்சத்தில் அம்மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு எம்மால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைரமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட மக்களே அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர். குறிப்பாக விலைமதிக் முடியாத உயிர்களை மட்டுமன்றி பெறுமதியான அவர்களது சொத்துக்களையும் இழந்து அந்த மக்கள் இன்றும் அவலவாழ்வையே வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் அம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போலித் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக உள்ளூராட்சி சபைகளின் கீழான பல்வேறு வேலைத்திட்டங்கள் யாவும் இதுவரை முன்னெடுக்கப்படாமல் செயலிழந்து காணப்படுகின்றன.

வடக்கு மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் கூட முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றமையானது அந்த மக்களின் துரதிஷ்டத்தை வெளிப்படுத்துவதாகவே எண்ணமுடிகின்றது.

எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் இம்மாவட்ட மக்கள் கடந்தகால அனுபவங்களை படிப்பினையாக கொண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் எமக்கு முழுமை  ஆதரவை தரும் பட்சத்தில் நிச்சயம் மாற்றத்தை எம்மால் ஏற்படுத்தமுடியும் – என்றார்.

இதன்போது ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையில் 1973 முதல் 1998 வரை  நீண்காலமாக பணியாற்றி தற்போது இளைப்பாறியுள்ள தொழிலாளர்களுக்கு இதுவரையில் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டிராத நிலையில் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகளையும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்னாள் பணியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் துறைசார்ந்தோருடன்  கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related posts:


தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ள...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...