ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

ஊர்காவற்றுறை மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக நாளைமுதல்(26) இரண்டு பவுசர்களில் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் இப்பகுதிக்ககான குளாய் வழிமூல நீர்வழங்கலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை காப்பெற் வீதிக்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தபின் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
குடிநீருக்காக இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொள்வதை நான் அறிவேன். கடந்த காலங்களில் இப்பகுதிக்கு நாம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்த போதிலும் இடையே ஏற்பட்ட அட்சி மாற்றத்தால் அதை முழுமையாக தொடரமுடியாத நிலை காணப்பட்டது.
ஆனாலும் இப்பிரதேச மக்கள் எமது கட்சியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இப்பிரதேச சபையின் அதிகாரத்தை தொடர்ச்சியாக எமது பொறுப்பில் வழங்கிவருகின்றார்கள். அந்தவகையில் இன்று தமது குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தரருமாறு கோரிக்கையை இப்பகுதி மக்கள் என்மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக முன்வைத்துள்ளனர்.
அவர்களது நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடித்தது கிடையாது. அந்தவகையில் நாளைமுதல் (26) குடிநீர் பிரச்சினைக்கான உடனடி தீர்வாக இரண்டு பவுசர்களில் சாட்டி பிரதேசத்திலிருந்து இப்பகுதிக்கு எடுத்தவந்து மக்களது தேவைகளுக்கு பயன்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
அதுமாத்திரமல்லாது இவ்வருட இறுதிக்குள் குளாய்வழி மூல நீர்வழங்கலுக்கான திட்டத்தை அமுல்படுத்த நீரியல் வளங்கல் அதிகார சபையுடன் கதைத்து இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்கின்றேன்.
அத்துடன் இப்பகுதி மக்கள் எம்மிடம் விடுத்துள்ள ஏனைய கோரிக்கைகளான வீதி புனரமைப்பு, வாழ்வாதார உதவிகள், என்பவற்றுக்கான தீர்வுகளை அடுத்த வருட முற்பகுதிக்குள் தீர்வகாண முயற்சி மேற்கொள்வதோடு இப்பிரதேசத்தில் அடுத்தவருட முற்பகுதியில் முதற்கட்டமாக 40 வீடுகளை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சின் இணைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின், அமைச்சின் வடமாகாண இணைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் வேலணை பிரதேச தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|