ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019

மக்களின் நலன்சார்ந்ததும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தியதுமான பொதுவான தீர்மானங்களை முன்னிறுத்தி அவற்றை சிறப்பான முறையில் செயற்படுத்தும் விதமாக நாம் ஒவ்வொருவரும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச ஆலோசனை சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தின்போது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்காக உயிர் நீத்தி அனைத்து இயக்கங்களினதும் போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம்  –

கடந்தகாலங்களில் நாம் பல்வேறுவகையான மக்கள் நலன்சார் திட்டங்களை செய்து சாதித்துக்காட்டியிருக்கின்றோம். அத்தகைய மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்களை மேலும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு எமக்கு மக்களின் ஆணையும் அரசியல் பலமும் இன்றியமையாததாகின்றது.

அவ்வாறு எமது ஒன்றிணைந்த உழைப்பின் ஊடாகவே நாம் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட இதர வேலைத்திட்டங்களை தடங்கல் இன்றி விரைவாக முன்னெடுக்கமுடியும் என நம்புகின்றேன்.

அந்தவகையில் எமது மக்களின் எதிர்கால வளமான வாழ்வை கருத்திற் கொண்டு தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் உழைக்கவேண்டும். மத்தியில் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கூடாக எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் மட்டுமல்லாது அபிவிருத்திகளையும்  அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும் என்பதை கடந்த காலமும் நிகழ்காலமும் பதிவு செய்திருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே ஊர்காவற்றுறை பிரதேசத்தின்  பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அவற்றுக்கான தீர்வகள் குறித்தும் ஆலோசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது...
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு - மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் ...