ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

ஊர்காவற்துறை, தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்தப்பட்டது. இதன்போது, ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி மற்றும் பிரதேச சபை தலைவர் ஜெயக்காந்தன் மற்றும் சுகாதார தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
ஊற்காவற்றுறை கரம்பன் கிழக்கு அரணவண்ணான் குளத்தினை சீராக புனரமைத்து தருமாறும் மேற்படி குளத்தில் இறங்கி குளிப்பதற்கான பாதையை அமைத்து தருமாறு பிரதேச மக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிமிர்த்தம் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குளத்தின் புரனமைப்பின் அவசியத்தை கருத்திற்கொண்டு இவ்வருட இறுதிக்குள் புனரமைப்ப செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|