ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

Wednesday, January 10th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம்; இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை திறந்த வெளி அரங்கில் இன்றையதினம் பிற்பகல் நடைபெறவுள்ள குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில்  கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றவுள்ளதுடன் விஷேட உரையினை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆற்றவுள்ளார்.

இந்த எழுச்சிக் கூட்டத்திற்கு ஊர்காவற்றுறை உள்ளிட்ட தீவக மக்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

இக்கூட்டத்தில் கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தெளிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று யாழ் மாவட்டத்தின் ஏனைய தேர்தல் தொகுதிகளிலும் இவ்வாறான பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26695517_1827702400863020_1904763312_o

Related posts: