ஊர்காவற்துறைக்கு பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடல்!

Thursday, April 13th, 2023

ஊர்காவற்துறை  பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு  உட்பட்ட அனலைதீவு, ஏழுவைதீவு, தப்பாட்டி, மெலிஞ்சிமுனை ஆகிய பிரதேசங்களில்  உள்ள கடற்றொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் விசேடமாக குருநகர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் இழுவை படகு தொழில் முறைகளால் ஏற்படும் இடையூறுகளை உடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காணப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத தொழில் முறைகளை உடன் தடுத்து நிறுத்துவதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்வதெனவும் முடிவு காணப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் ஊர்காவற்துறை பிரதேச செயலர் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஊர்காவற்துறை கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதனிடையே ஊர்காற்துறையில் நீண்ட காலமாக செயற்படாமல் இருக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின்  கடற்கலன்கள் பரிசோதிக்கும் – திருத்தும் தளத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதன் செயற்பாடுகளை மீள இயங்குவதற்கு ஏதுவான நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: