உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை அனுமதி – அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 25th, 2020

உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதை கருத்தில் கொண்டு இன்று இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை மீன்பிடி கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் - நாடாளுமன்றில் ...