உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, April 17th, 2024

உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன்  ஊடக உற்பத்தி பொருள்களின் அளவு நிலைகளை அதிகரிப்பதுடன் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருப்பதை உறுதிசெய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளும் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மாவட்டத்தின் பொருளாதார வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள்  என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...
அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு - சமகால அரசியல் நில...
எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் - அமைச்சர் டக்ளஸ்...