உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Tuesday, November 17th, 2020

வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின் மீன் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்கும் வகையிலான எந்தவகையான தீர்மானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று (17.11.2020) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் – பின்னரும் இடம்பெற்ற அமைச்சரவையில், வடக்கு மாகாண விவசாயிகள் சுமார் 200 ஹொக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கைக்கு தயாராக இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான விதை உருளைக் கிழங்குகளை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.

வடக்கு மாகாண உருளைக் கிழங்கு பயிர்செய்கையாளர்கள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்குகளை வழங்குவற்காக சுமார் 60 மில்லியன் ரூபாய் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கப்பட்டமைக்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மகிழ்ச்சி வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர், வடக்கின் ஏனைய மாவட்ட விவசாயிகளும் குறித்த நன்மையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேவேளை, உள்ளூர் ரின் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் எவ்வாறான செயற்பாடுகளையும் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்

Related posts:

“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகா...