உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன் முன்னெடுப் பதற்கு நடை பெறவுள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, January 26th, 2018

மக்களின் வாழ்வியல் மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளை முன்னிறுத்தி உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன்  முன்னெடுப்பதற்கு இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்திக்கொள்ள  மக்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை கிழக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு என்பது கடந்த காலங்களில் மட்டுமல்லாது இப்போதும் கூட தேர்தலுக்கான கூட்டாகவே இருக்கிறதே ஒழிய மக்கள் நலன் சார்ந்ததாக இருந்ததும் இல்லை. இருக்கப்போவதுமில்லை .

இது தேர்தல் காலமானபடியால் மக்களை மயக்கும் பசப்பு வார்த்தைகளுடனும் உணர்ச்சி பேச்சுக்களுடனும் பலரும் இங்கே வருவார்கள்.  ஆனால் மக்கள் நலன்சார்ந்து கடந்த காலங்களில் உழைத்தவர்களையும் தற்காலத்தில் உழைத்துக் கொண்டிருப்பவர்களையும் எதிர்காலத்தில் உழைக்கக்கூடியவர்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் மக்களுடன் நின்று மக்களுக்கான சேவை புரியும் நாம் எப்போதும் ஒரே எண்ணத்துடன் ஒரே கொள்கையுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் மக்களின் வாழ்வியல் மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளை முன்னிறுத்தி உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன்  முன்னெடுத்து மக்களது பிரச்சினைகளை மட்டுமன்றி அவர்களது அரசியல் உரிமைப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காகவே நாம் அயராது உழைத்துவருகின்றோம்.

எனவே நீங்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலூடாக எமக்குத் தரும் ஆதரவும் உங்களது வாக்கும் எங்கள் கட்சிக்கானதாக இருக்க மாட்டாது. அது உங்களுக்கானதாகவே இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: