உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார் டக்ளஸ் தேவானந்தா! (விஞ்ஞாபனம் இணைப்பு)

Wednesday, December 27th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

“சொன்னதை செய்பவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுட வாசகத்துடன் இவ் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.

இதில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பனவற்றை உள்ளடக்கியதாக இவ்விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெளியிடு நிகழ்வின்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற  தேர்தல் விஞ்ஞாபனம்  2018

நேசமிகு மக்களுக்கு, நடைபெறவிருக்கும் உள்ராளூட்சி தேர்தல் தொடர்பாக, எனது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நான் பதினைந்து வருடங்களுக்கு மேலான ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும், முப்பது வருடங்களுக்கு மேலான தேசிய அரசியல் வழிமுறைப் போராட்டத்திலும் முழுமையான அர்ப்பணிப்போடும் அதற்கான உண்மையான உழைப்போடும் ஈடுபட்டு வந்திருக்கின்றேன்.

புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட இயக்கங்களுடனும் பொது இணக்கப்பாடு காணப்படவேண்டுமென்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அக்காலத்தின் அகச்சூழலும், புறச்சூழலும் விடுதலைப் போராட்ட இயக்கங்களை வேறுபடுத்தியே வைத்துவிட்டன. இலக்கு ஒன்றாக இருந்தபோதும் அதற்கான போராட்ட வடிவமும், அந்த போராட்டத்தை முன்னெடுத்த விதமும் வேறுபட்டதாக அமைந்துவிட்டது. அது துரதிஷ்டமே. நான் அடைமுடையாத இலக்கு நோக்கி எனது மக்களை ஒருபோதும் வழிநடத்தியதில்லை.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எனது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை. எல்லாக் காலத்திலும் மக்களோடு இருந்து, மக்களோடு வாழ்ந்து வருவதால் எனது மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கின்றேன். மேலே கூறிய இரு வழிமுறை போராட்டங்களுக்கு ஊடாகவும் கிடைக்கப் பெற்ற அனுபவங்களில் இருந்தே எனது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக தீர்வு காணப்படவேண்டும் எனறு முயற்சித்திருக்கின்றேன்.

தீர்வுகளை கண்டும் இருக்கின்றேன். ஆனாலும், இன்னும் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். மக்கள் எந்தளவிற்கு என்னை பலப்படுத்தி, நான் முன்னெடுக்கும் வழிமுறையை பின்பற்றுகின்றார்களோ அந்தளவிற்கு பிரச்சினைகளை தீர்த்து,உரிமைகளைப் பெற்று கௌரவமான, சமத்துவமான வாழ்வை நோக்கி நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. காலத்திற்கு காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியும், தமது இயலாமை காரணமாக அரசுகள் மீது மட்டுமே குறைகளை சுமத்தியும் சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விடமுடியாது.

மக்கள் மத்தியில் வாழாதவர்களையும், கிடைக்கும் அரசியல் அதிகாரங்களை மக்களின் நலனுக்காக வினைத்திறனோடு செயற்படுத்த இயலாதவர்களாகவும் தமிழர்கள் இரத்தமும் தசையுமாய் நடாத்திய உரிமைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களாகவும் இன்று இணக்க அரசியலின் பெயரால் ஏமாற்று அரசியல் நடாத்தி கொண்டிருப்போருக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

அந்த மாற்றத்திற்கு தலைமை ஏற்கும் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள நானே முன்வருகின்றேன். மாற்றுத் தலைமை என்பது இந்த மக்களோடு மக்களாக வாழாமல் மக்களுக்கு வெளியே இருந்து வருபவராகவோ, கடந்தகாலத்தில் நாம் முன்னெடுத்த உரிமைக்கான போராட்டத்தை நேற்று வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து அதை தமது பிழைப்பிற்காக பயன்படுத்தி கொண்டவர்களாகவோ இருக்கமுடியாது. மக்களோடு வாழ்ந்து, மக்கள் அனுபவித்த வலிகளிலும், துயரத்திலும் பங்கெடுத்து தாயக மண்ணின் தன்மையறிந்து, தேவையறிந்து செயற்படும் செயல் வீரரே மக்கள் தலைவராக திகழமுடியும்.

அன்புக்குரிய மக்களே, கடந்த காலத்;திலும் இது போன்று நிதர்சனமாக நான் முன்வைத்த கருத்துக்கள் உங்களை முழுமையாக வந்து அடையவில்லை. அதற்கு சில தடைகள் இருந்ததையும் நான் மறுக்கவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். எதிர்காலத்திலாவது சரியான பாதையில் பயணிக்க அணிதிரண்டு வருவீர்கள் என்றும் வீணைக்கு வாக்களித்து உங்களை நீங்களே பலப்படுத்திக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன்.

என்றும் உங்கள் சேவையில்

டக்ளஸ் தேவானந்தா பா.உ

செயலாளர்; நாயகம்,

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி. (ஈபிடிபி)

 • நாங்கள் இதுவரையில் முன்னெடுத்திருந்த மக்கள் நலன்சார்ந்த பணிகளை, நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் தொடர்வதன் மூலமாக… நுளம்புகளை ஒழித்தல், குப்பைகளை அகற்றி, மீள் சுழற்சி செய்தல்!
 • அனைவருக்கும் குழாய் மூலமான சுத்தமான குடிநீர்!
 • வீதிகள் அனைத்தும் செப்பனிடப்படல், அனைத்து வீதிகளுக்கும் வீதிகளுக்கும் மின்னொளியூட்டல்!
 • கால்வாய்கள் அமைத்து, கழிவு நீர் அகற்றுதல்!
 • மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்!
 • இயற்கை அனர்த்த பாதிப்பு இடங்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள்!
 • சனசமூக நிலையங்களை வலுப்படுத்தி, அவற்றை சமூகத்தின் முன்னேற்றம் நோக்கி நகர்த்தல்!
 • பொது நோக்கு மண்டபங்கள், பொதுச் சந்தைகளை தரமுயர்த்தியும், மேலும் உருவாக்கியும், மக்களது வாழ்வாதாரங்ளை மேம்படுத்துதல்!
 • கிராம அபிவிருத்திச் சங்கங்களை மேலும் மேம்படுத்தி, சுய தொழில்வாய்ப்புகளுக்கு உதவுதல், ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் – தொழில்வாய்ப்புகளிலும் பங்கெடுக்க வழி செய்தல்!
 • விளையாட்டுக் கழகங்களை வலுப்படுத்தியும், உடற்பயிற்சி நடைபாதைகளை அமைத்தும் உடல், உள ஆரோக்கியம் பேணல்!
 • சிறுவர் உடல், உளம் வலுப்படுத்த, அறிவும், பொழுதுபோக்கும் இரண்டறக் கொண்ட சிறுவர் பூங்காக்களை அமைத்தல்! மயானங்களைப் புனரமைத்துப் பராமரித்து, மக்கள் நலனை முன்னிறுத்துதல்!
 • ஊழலற்ற உள்@ராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுத்தல்!
 • உள்@ராட்சி மன்றங்களை வலுப்படுத்த, விN~ட திட்டங்களை உருவாக்குதல்! வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுசுட்டான், மடு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று (வாழைச்சேனை) ஆகிய புதிய பிரதேச சபைகளை உருவாக்குதல்!
 • மானிப்பாய், சங்கானை, நெல்லியடி, சுண்ணாகம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா பிரதேச சபைகளை நகர சபைகளாகவும், வவுனியா, திருகோணமலை நகர சபைகளை மகா நகர சபைகளாகவும் தரமுயர்த்தல்!
 • கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களுக்கு புதிய நகர சபைகளை உருவாக்குதல்!
 • இத்தகைய ஏற்பாடுகளின் மூலமாகவும், தற்போது நிலவும் வேலைவாய்ப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, வழங்குதல்!
 • உள்@ர் விவசாய செய்கையினை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தல், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதிக்க ஏற்பாடுகள் செய்தல்!
 • விவசாய உள்ளீடுகள் அனைத்தும் இலகுவாகக் கிடைக்க வழி செய்தல், அரச மானியங்களை, நிவாரணங்களை உடன் பெற்றுக் கொடுத்தல்! புகையிலை செய்கைக்கு ஈடான பணப் பயிர்ச் செய்கைகளை ஊக்குவித்தல்!
 • குளங்களைப் புனரமைத்து, பசுமை வலையங்களாக மாற்றி, நீரைச் சேமித்தல்!
 • உவர்நீர்த் தடுப்பணைகள் அமைத்தல்! கடலணைகள் அமைத்தல்! புற்தரைகளை உருவாக்கி, போதிய கால்நடை மருத்துவ வசதிகளை விஸ்த ரித்து, பாலுற்பத்தியைப் பெருக்குதல்!
 • பார்த்தீனியம் அழித்தல்! நெடுந்தீவின் எமது வரலாற்று அடையாளமான குதிரைகளைப் பாதுகாத்து, பராமரித்தல்! உள்@ர் தரைவழி மற்றும் கடல் வழி படகுப் போக்குவரத்துச் சேவைகளை அதிகரித்து, தரமுயர்த்தி, உறுதி செய்தல்!
 • சுற்றுலாத்துறையை விரிவாக்கி, தரமுயர்த்தி , எமது மக்களது பொருளாதாரத்தை அதிகரித்தல்!
 • சட்டவிரோத காடழிப்புகளைத் தடுத்து, மரங்களை நட்டு, பராமரித்து, சூழல் மாசுறுவதைத் தடுத்தல்!
 • காட்டுவிலங்குகளில் இருந்து பாதுகாப்பையும், காட்டுவிலங்குகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல். சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுத்து, நியாயமான மணல் விநியோகத்தை சீரமைத்து, கட்டுமானத் தொழிலுக்கான தடைகளை அகற்றல்!
 • விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து, போதையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல், மாணவர்களின் பாடசாலை இடை விலகல்களை தடுத்தல். முன்பள்ளிகளை வலுப்படுத்தி, முன்னோடி சமூகத்தை உருவாக்குதல், ஆசியர் ஊதியத்தை அதிகரித்தல், மாணவர்களுக்கு போசாக்கு உணவளித்தல், சேமிப்புத் திட்டமொன்றை உருவாக்கல். செயலிழந்துள்ள கைத்தொழிகளை மீள செயற்படுத்துதல், வளங்களைப் பயன்படுத்தி, தொழிற்துறை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குதல்!
 • கிராமியப் பெண்களை வலுப்படுத்த, கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குதல்!
 • மேலும், வீடுகள் தோறும் மென்பொருள் உதிரிப்பாக கைத் தொழில்களை உருவாக்குதல்!
 • மாதர் சங்கங்களை வலுப்படுத்தி, இலகு கடன் முறைமைகளை அறிமுகப்படுத்தி, மாதர் சங்கங்கள் ஊடாக செயற்படுத்தல்! நுண்கடன் தொல்லைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் மேலும் பல்வேறு கடன் மற்றும் நிதித் திட்டங்களை சமூக அமைப்புகளின் ஊடாக செயற்படுத்தல்!
 • குடும்பத் தலைமைகளை ஏற்றுள்ள பெண்களின் வறுமை போக்க வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சமூகப் பாதுகாப்பு, வழிகாட்டல்களை வழங்குதல்! முன்னாள் இயக்கப் போராளிகளுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்துதல்!
 • பனை சார் தொழிலுக்கான வரிகளை நீக்கி, நவீன தொழிற்துறையாக மாற்றி, ‘ப்ளாஸ்ரிக்” – ‘பொலித்தீன்” உற்பத்திகளுக்கான மாற்றுத் தொழில் முயற்சிகளை உருவாக்குதல்! கல்லுடைக்கும் தொழிலுக்கான தடைகளை அகற்றுதல்!
 • அனைவருக்கும் வீடுகள், மலசலகூடங்கள், மின்சாரம் வசதிகள்! அனைத்து நகரங்களிலும் போதியளவு மலசலகூட மற்றும் குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்தல்.
 • கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுதல். வடக்கில் வாழும் மலையக மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள். கூட்டுறவுத் துறையினை மேம்படுத்தல்!
 • முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் மேம்படுத்தல்!
 • காணிகளற்றோருக்கு காணிகள்! காணி உரிமம் அற்றோருக்கு காணி உரிமங்கள்!
 • கலை, இலக்கியவாதிகளை கௌரவித்து, ஊக்குவித்தல்! கரையோரங்களில், இடிதாங்கிகள், இறங்குதுறைகள், வெளிச்ச வீடுகள் அமைத்தல்! எல்லைதாண்டும், அத்துமீறும் கடற்றொழில்களுக்கு முடிவுகட்டுதல்!
 • அத்துமீறிய குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தல்! சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகள் பட்டியலை மீளப் பரிசீலித்து, தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்!
 • கிராமங்கள் தோறும் இலகுவான மருத்துவ சேவையை உறுதிப்படுத்தல்!
 • மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துதல்!
 • யுத்தம் காரணமாக மாற்றுத் திறனாளிகளானவர்களுக்கு விஷேட திட்டங்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கு இலகு சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள்!
 • கிராமங்கள் தோறும் ‘குறை தீர்க்கும் குழுக்கள் அமைத்;து, மக்கள் குறைகளறிந்து, அவற்றைத் தீர்த்தல்! மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக… காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக…
 • பரிகாரங்கள் காணப்படுவதற்காக… எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவிப்பதற்காக…
 • முகாம்களிலுள்ள எமது மக்களை விரைந்து மீள்குடியேற்றம் செய்வதற்காக…
 • யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற பொது நினைவுதூபி அமைத்திட, அதற்கென ஒரு தினத்தை குறித்தொதிக்கிட…
 • இந்தியாவுடனும், தமிழகத்திடமும் உறவுகளை தொடர்ந்து பேணி எமது மக்களுக்கான உதவிகளையும், மலிவான விலையில் தரமான பொருட்களையும் நேரடியாக வடக்கிற்கு இறக்குமதி செய்வதற்காக…
 • வன்முறையற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக…
 • புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளுக்காக…
 • சமூகத்தின் தலைமையைப் பொறுப்பேற்போம்!
 • தமிழர் தாயகம் காத்திடுவோம்!
 • நாங்கள் இதுவரையில் செய்தவை ஊரறியும் –
 • இனியும் நாங்களே செய்ய வேண்டியதையும் ஊரறியும்!

 

Related posts:

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி - டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெர...
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் - பேசாலை பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ்...

நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...
தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்ச...
நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...