கடந்த காலத்தைக் கௌரவித்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்!

ரஷ்யாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 19 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கொள்ளும் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாகலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
கொழும்புசுதந்திரசதுக்கத்திற்குஅருகில் அமைந்துள்ள ரஷ்ய கலாசாரநிலையத்தில் இன்றையதினம் (03) இவ்வங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது.
சமாதானம், ஓத்துழைப்பு மற்றும் சமூகநீதிக்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடுவோம்! கடந்தகாலத்தை கௌரவித்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்! என்றதொனிப்பொருளில் ரஷ்யாவின் சோச்சிநகரில் ஒக்டோபர் மாதம்19 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழா நடைபெறவுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ள ஆயத்தக்குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்; கட்சிகளின் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைத்தனர்.
இன்றைய கூட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 32 மாணவர், இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கெடுத்து இருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணித்தலைவர் தோழர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விழாவுக்கான பிரகடனத்தை தமிழ்மொழியில் அவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில்அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கியூபா, வியட்நாம், ரஷ்யா ஆகியநாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்டபல்வேறுதரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|