உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மற்றுமொரு மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 25th, 2018

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணை இன்றைய தினம் (25) யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி இராமகமலன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

உதயன் பத்திரிகையில் வெளிவந்த உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி டக்ளஸ் தேவானந்தா மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது டக்ளஸ் தேவானந்தா தரப்பில் சட்டத்தரணி அப்துல் நஜீம் ஆஜராகியிருந்ததுடன் மீள் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தாவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கில் யாழ் மாவட்ட நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கி நட்ட ஈடாக 2 மில்லியன் ரூபாயை உதயன் பத்திரிகை பிரசுரப்பாளரான நியூ உதயன் பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

DSC_0006

DSC_0013

DSC_0016

Related posts:

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வலிகாமம் வடக...
எமது பாதை சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்டளஸ் தேவானந்தா...
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்த...