உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, September 19th, 2022

மன்னார், சௌத்பார் கிராம மக்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை விருத்தி செய்யும் நோக்கில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, சௌத்பார் கிராம மக்கள் சந்தித்து தங்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், உட்கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளுமளவிற்கு நாட்டின் பொருளாதார நிலை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியதுடன், உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனூடாக உட்கட்டுமான வசதிகளை உருவாக்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதனிடையே

மன்னார், சௌத்பார் கிராமத்தில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களினால் ஆரம்பிக்கப்படடுள்ள கடலட்டை மற்றும் இறால் பண்ணைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். மேலும், சௌத்பார் கிராமத்தில் நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு இருக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செ...
அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக...
தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...

கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தராது – உரும்பிராயில் டக்ளஸ் ...
சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ்...