உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? – எம்.பி டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, March 12th, 2019

நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உணவுப் பதனிடும் நிலையங்கள் அமைப்பதாகக் கடந்தவரவு–செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அது எந்தவகையில் சாத்தியமாயிற்று என்பது தெரியவில்லை.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி கைத்தொழிற் பேட்டைக்கு செல்கின்ற பாதை இன்னமும் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று ஆரம்பிக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி கைத்தொழிற் பேட்டைக்கு செல்கின்ற பாதை இன்னமும் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று ஆரம்பிக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி கைத்தொழிற் பேட்டைக்கு செல்கின்ற பாதை இன்னமும் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று ஆரம்பிக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆனால், இம்முறையும், மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைக்கப்பட்ட 10 துணைப் பொருளாதார நிலையங்கள் வடக்கு, கிழக்கு  மாகாணங்களில் உருவாக்கப்படும் என்றும், மேலும், காங்கேன்துறை, மாந்தைக் கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கிண்ணியா, சம்மாந்துறை, திருகோணமலையில் கைத்தொழிற் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வரவு – செலவுத் திட்ட வரைபில், யுத்த மற்றும் இன முறுகலினால் பாதிக்கப்பட்ட கணவன்மார்களை இழந்த பெண்களுக்கும,; முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுமெனக் குறிப்பிட்டிருந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களில் வாழ்வாதார வசதிகள் இல்லாதோருக்கு அவர்களது திறன்களின் அடிப்படையில் தேசிய தொழில்சார் தகைமை சான்றிதழ்கள் வழங்கப்படுமென்றும், இதற்கென நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

மேலும், குறைந்தபட்சம் 5 முன்னாள் இயக்க உறுப்பினர்களை தொழிலுக்காகச் சேர்த்துக் கொள்கின்ற தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 50 வீதமான ஊதிய மானியம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இவை எல்லாம் எற்தளவிற்கு சாத்தியமான செயற்பாடுகளாக சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன? என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

தாங்கள் கூறித்தான் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு தொடர்பில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன எனக் கூறி இந்த ஆட்சியை கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொண்டு வந்த தமிழ்த் தரப்பினர், உள்ளடக்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்பட்டனவா? என்பது தொடர்பில் அக்கறையின்றி, மௌனமாகவே இருந்துவிட்டு, இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தையும் நம்புகின்றோம் எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்க்கின்றபோது  வரவு – செலவுத் திட்ட வரைபுகளும், இந்தத் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளும் எமது மக்களைப் பொறுத்தவரையில் ஒன்றே என்றுதான் தெரிய வருகின்றது. அதாவது வெறும் வாய்ப் பேச்சு மாத்திரம்தான். அதுவன்றின் செயலில் ஒன்றுமே இல்லை என்றார்.

Related posts:


பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கை நடைமுறையில் உள்ளதா? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...
நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டமை நாடாளுமன்றில் உத்தியோகபூர்...