உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, January 27th, 2021

கடற்றொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டுதான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன். அதற்கு நீங்கள் எனக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய இழுவைப்படகு விவகாரம் ஒரு பாரிய பிரச்சினையாகத்தான் உள்ளது. இதற்கு எமது அரசு இந்த ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் தீர்வு பெற்றுத்தரும் என நான் நம்பகின்றேன் என்று டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியிருந்தார்.

இந்திய மீனவர்களது அத்துமீறிய, தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளால் தாம் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுககள் தொடர்பில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் ஒன்று கூடியிருந்த குறித்த போராட்டக்காரர்கள் அமைச்சரிடம் குறித்த பிரச்சினைகள் அடங்கிய மகஜரை கையளித்த அதேவேளை தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டுதான் எனது ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையும். அதை நீங்கள் நம்புங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல விரைவான நீடித்த வாழ்வாதார ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன்.

எனது இந்த முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் கடற்றொழிலாளர்களாகிய சகலரது ஒத்தழைப்பும் ஒத்தாசையும் கிடைக்கவேண்டும் என்றும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் கடற்றொழில் அமைச்சராகிய என்னால் நீங்கள் எதிர்கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வை பெற்றுத்தரமுடியும் என்றும் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந...
கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை - ஆனால் மக்களுக்கு யதார்த்தமா...