உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்!
Friday, July 24th, 2020உடுவில், மல்வம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது
குறித்த சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிழ்வு இன்றையதினம் காலை நடைபெற்றது.
அத்துடன் குறித்த ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்தி்ல் இடம்பெற்ற ஆடிப்பூர பூஜை வழிபாடுகளிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றான ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளல் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றான ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று தனது பிறந்த ஊரான அத்தியடியில் அமைந்துள்ள ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|