உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றம் காலவரையறை இடப்பட்டே வாழங்கப்படும்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 23rd, 2020

யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றத்தை கால வரையறையுடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அமைச்சரின் அலுவலகத்துக்கு வருகைதந்திருந்த குறித்த ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தில் கால வரையறை இடப்படாது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கால வரையறை இடப்பட்டு தமக்கான இடமாற்றம் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் தாங்கள் இடமாற்றம் பெற்றுச் செல்ல தயாராக இருக்கின்றபோதிலும் கால வரையறை இடப்படாதுள்ளமையால் தாம் எதிர்க்லத்தில் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் தமது இடமாற்ற கடிதத்தில் இடமாற்றப்படும் திகதியிலிருந்து 4 ஆண்டுகளுக்கான திகதி இடப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை அவதானத்தில் கொண்ட அமைச்சர் துறைசார் தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுசென்று அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: