உங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுத்தர முயற்சிக்கின்றேன் – தீவகபகுதி  தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு…!

Tuesday, April 19th, 2016

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மாநாட்டினூடாக முன்வைத்துள்ள கோரிக்கைகளை  நான் பரந்தளவிலான பார்வையூடாக  எடுத்து அனைத்து மக்களையும் முன்னிறுத்திய தீர்வுகளாக பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயராளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீவகபகுதி  தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் சிறப்ப அதிதியாக கலந்துகொண்டு மக்களது கோரிக்கைகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று எம்மிடம் அரசியல் அதிகாரம் என்பது குறைவாகவே உள்ளது. இருந்தும் அதிகாரத்திலுள்ளவர்கள் எம்முடன் தொடர்ந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனால் உங்கள் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றிக்கொள்ளலாம் அத்துடன் காரைநகர் பாதை தொடர்பான விடயத்தை நான் மீண்டும் நாடாளுமன்றத்தல் கேள்வியெழுப்பி வரும் ஜனவரி மாதத்தினுள் அதை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டு தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை பார்க்க வீடியோ இணைப்பை கிளிக் செய்யவும்..

Related posts:

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நலன்களை அரசு அவதானத்திலெடுக்க வேண்டும்! -  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று ...
மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு பொருத்தமான திணைக்களங்களை அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ...