உங்கள் எதிர்காலம் உங்கள் கரங்களில் : வழிகாட்டியாக நான் இருக்கிறேன் என்னுடன் கைகோருங்கள்-கிளி.கல்மடு மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி.!

Wednesday, November 13th, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும் போலி பிரசாரங்களுக்கும் ஈர்க்கப்பட்ட எமது மக்கள் தமது வாவியலை பறிகொடுத்ததைத் தவிர எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது சந்ததிகளின் எதிர்காலத்திற்கு மட்டும் தீர்வுகண்டுள்ளனர் இதை உணர்ந்து எமது மக்கள் வரவுள்ள் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சி கல்மடு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் மக்கள்.இன்னமும் விளிப்படையவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான் எமது மக்கள் இன்னமும் எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்று அந்த நிலை மாறிவருகின்றது

நாம் ஆயுத வன்முறைகளால் தீர்வுகளை கண்டுகொள்ள முடியாது என 1987 களிலேயே எடுத்துக் கூறியிருந்தோம்.

அந்த தீர்க்கதரிசனம் மிக்க எமது கருத்தை சக தமிழ் தரப்பினர் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் எமது மக்கள் தீர்வுகளுக்கான பல வாய்ப்புக்களையும் எதிர்காலத்தையும் முழுமையாக இழந்துள்ளனர்.

வரலாற்றில் நாம் தமிழ் மக்களுக்கு செய்த சேவைகளைப் போல இதர தமிழ் தரப்பினர் எவரும் செய்தது கிடையாது. இனியும் எம்மைப்போல எவராலும் செய்யவும் முடியாது.

நாம் மக்கள் நலன்களை நேசித்தே எமது ஒவ்வொரு செயற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.

அந்தவகையில் தற்போது எமது மக்களிடம் விழிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்களை வெற்றியடையச் செய்யும் என நபுகின்றேன்.

அவ்வாறு நாம் கூறும் வழிமுறைக்கு உங்கள் ஆதரவுப்பலம் கிடைக்குமானால் நிச்சயம்.உங்கள் அபிலாசைகள் அனைத்துக்கும் தீர்வுகண்டுதருவேன் என்றார்.

Related posts:

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...

அட்டை பிடிப்பவர்களால் மீன் பிடிப்பவர்கள் பாதிப்பு - சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...