உங்களுடன் ஒன்றர சேர்ந்து வாழ்வதே எனது கனவாகிறது -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 28th, 2017
மக்களாகிய உங்களுடன் என்றும் ஒன்றரக் கலந்திருப்பதையே நான் மனதார விரும்புகிறேன். கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பு மண்ணுடன் மிகநெருக்கமாக இருந்து வேலை செய்ய முடியாமல் போனது மனதிற்கு வேதனை தருகின்ற விடயமே. எமது மக்களின் ஆயுதப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய காலப் பகுதியில் இம்மக்களுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்தவன் என்ற வகையில் இம்மக்களின் மனங்களை நான் நன்கறிவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதி மக்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேற்று முன்னெடுத்திருந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்கள் எவ்வாறு கழிந்திருப்பினும், எதிர்வரும் காலங்கள் எமக்கு பொற்காலமாக அமைய வேண்டும் என்பதே எனது அவாவாகும். இந்த மக்களுக்கு என்னாலான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதோடு அவர்கள் மத்தியில் எதிர்காலத்தில் ஒன்றரக் கலந்து வாழ்வேன் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நான் இத்தருணத்தில் தரவிரும்புகிறேன்.
18745199_1425471010825315_1028394879_o copy

Related posts:

நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...
சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் - மே தின ...