‘ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ உருவாக்கம் – நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிப்பு!

Saturday, September 17th, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஈ.பி.டி.பி. கட்சியில் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தினையும் வெளியிட்டனர்.

குறித்த இளைஞர்களின் ஆர்வத்தினை புரிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘ஈ.பி.டி.பி. க்கான புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ ஒன்றை கட்டமைத்து அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும் தெரிவு செய்துள்ளார்.

எதிர்காலத்தில் குறித்த அணியினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதுடன், கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: