ஈ.பி.டி.பியின் வடக்கு முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Monday, September 23rd, 2024

…..

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் நிர்வாக பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இன்று (23.09.2024) முற்பகல் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது சமகால மற்றும் எதிர்கால அரசியில் நிலைமைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் விளக்கமளித்திருந்தார்.

அத்துடன் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டது.

விசேடமாக கட்சியின் பொறிமுறைகள் அதனூடான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது, மற்றும் கட்டமைப்புக்களை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு செயலாளர் நாயகம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: