ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற அரசியல் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான கூட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

முமுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டத்தில் உள்ள 241 வட்டாரங்களையும் உள்ளடக்கிய நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுடனான விஷேட கூட்டம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காலை 10 மணிக்கு அரம்பமாக நடைபெறவள்ளது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெறறும் குறித்த கூட்டத்தின்போது சமகால அரசியல் நகர்வுகளை கட்சியின்பால் செயலுருவாக்குதல், வட்டார செயலாளர்களது வகிபங்கு தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதுடன் பிரதேச அபிவிருத்திகள் மற்றும் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும்   விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: