ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!
Sunday, August 23rd, 2020ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட உள்ளளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்புடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றுவருகின்றது.
இதன்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சி பெறந்றுக்கொண்ட பெறுபெறுகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில்விரிவாக ஆராயப்படுவதுடன் கட்சியின் கட்டமைப்பு மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக அண்மையில் காலமான நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் புலவர் அரியனாயகம் அவர்களின் மறைவை நினைவுகூரும் முகமாக ஒரு நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|