ஈ.பி.டி.பியின் கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஊர்மக்களால் விரட்டியடிப்பு: சம்பூரில் சம்பவம்!

Saturday, January 6th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்ட கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஒருவரை  சம்பூர் பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு விரட்டியடித்த சம்பவமொன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை சம்பூர் நீலாவேணி பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டார்.

இதன்போது கூட்டத்திற்கு வருகைதந்திருந்த குறித்த பகுதியைச் சாராத ஒருவர் திட்டமிட்டவகையில் கூட்டத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது செயலை அவதானித்த சம்பூர் மக்கள் குறித்த குழப்பவாதியை அங்கிருந்து விரட்டியடியுள்ளனர். அதன் பின்னர் குறித்த கூட்டம் மக்களது பெருமளவிலான ஆதரவுடன் நடைபெற்றது.

இதனிடையே கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மக்கள் மத்தியில் குறிப்பாக வடக்குக் கிழக்கு பகுதி மக்கள் மத்தியில் தமது எதிர்காலக் கனவுகளை வென்றெடுத்துத் தரும் வல்லமை கொண்ட தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை இனங்கண்டு அவரது தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றியடையச் செய்யும் முழு முயற்சியில் இருக்கும் நிலையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலவாதிகள் இவ்வாறான விசமத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: