ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில்ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் (புரட்சி மணி), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலன்ரின் (உதயன்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
Related posts:
மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி க...
அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை மக்களை கூண்டோடு அழித்துவிடும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் ...
|
|