ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விஜயம்!
Saturday, January 20th, 2018நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே இம்மாத முற்பகுதியில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு பல்வேறுபட்ட பிரதேசங்களுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் காண்பது தொடர்பாகவும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பங்கெடுக்கும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு இந்த விஜயம் அமைந்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனது வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|