இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, December 5th, 2018

மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக வழங்கப்படுகின்ற இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் மேற்படி விண்ணப்பங்களை அனைத்துப் பயனாளிகளுக்கும் ஒழுங்குற கிடைக்கச் செய்யும் வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்ட செயலகங்களில் பணியாற்றுகின்ற மேற்படி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, மேற்படி விண்ணப்பங்களை போதுமானளவு பிரதேச செயலகங்களுக்கு விநியோகிப்பதற்கும், பிரதேச செயலகங்கள் மூலமாக அவற்றினை எவ்விதமான தடைகளுமின்றி பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

47573421_1918873968409025_5054389987210952704_n

47250458_1918873978409024_1991649474153283584_o


13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமாகும் - டக்ளஸ் தேவானந்தா!
யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் - ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,.....
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக...