இளைஞர்களின் அமைதியின்மை, நாட்டுக்கு நல்லதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017

அனுராதபுரத்தில் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் 41 நாட்களான உண்ணாவிரதப் போராட்டமானது, உரிய நோக்கினை எட்டாத நிலையில் முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்படி கைதிகளின் கோரிக்கையானது தம்மீதான வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையாக இருந்தபோதிலும், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக மட்டத்தில், மாணவர்கள் தங்களது கற்கைகளை நிறுத்தியும், தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும் பரவலாக, பொது அமைப்புகள் தரப்பிலிருந்தும் கிடைத்திருந்தன.

எனினும், இந்தப் போராட்டத்தினை வழிநடத்தியிருக்க வேண்டிய தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள் தாமே என்போர் இந்த விடயத்தை தமது சுயலாப அரசியலுக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து செயற்பட்டதன் காரணமாகவும், மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அல்லது இக் கைதிகளின் விடுதலைக்காக நேர்மையான முறையில் செயற்படாததன் காரணமாகவுமே 41 நாட்கள் தொடர்ந்திருந்த போராட்டம், அதற்கான நோக்கம் நிறைவேறாத நிலையிலேயே கைவிடப்பட நேரிட்டுள்ளது.

இளைஞர்களின் அமைதியின்மை, நாட்டுக்கு நல்லதல்ல. இதை அனுபவத்தில் நாம் அனைவரும் அறிவோம்.

எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே. இது தொடர்பில் உரிய அனைத்துத் தரப்பினரும் அவதானங்களைச் செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: