இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!

அரச மற்றும் தனியார்த்துறைகளுக்கு இடையில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் போட்டிகள் இருக்கலாம். ஆனால், அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில், பாதையில் வேகத்தில் காட்டப்படுகின்ற போட்டிகளே இன்று பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன. போக்குவரத்தினை ஒரு மக்கள் சேவையாக கருதப்படுகின்ற நிலைமைபோய், அதனை வெறும் இலாபம் ஈட்டுகின்ற ஒரு துறையாகவே கொள்கின்ற நிலைமையே இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் –
அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள அதிகளவிலான வாகன நெரிசல்கள் காரணமாக பயணிகள் படுகின்ற அவஸ்தைகளைத் தவிர்க்கும் வகையில் இரயில் சேவையினை மேலும் வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டியதன் தேவை குறித்தும் கூடிய அவதானங்கள் செலுத்தப்படல் வேண்டும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|