இலவச பாடநூல்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு விடப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, May 25th, 2018

இலவச பாடநூல்களில் அதற்கான விலைகளும் தற்போது குறிக்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் இலவச பாடநூல்கள் விற்பனைக்கு விடப்படுமோ? என்ற சந்தேகமும் அச்சமும்;; எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தொடர்பில் பிரேணை தொடர்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து nதிவிக்கையில் –

இம்முறை கல்வியாண்டுக்கான பாடசாலை புத்தகங்கள் பலவும் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுவதாக எமது பகுதிகளில் ஒரு முறைப்பாடு எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூல்கள் தொடர்பிலும் இந்த முறைப்பாடு எழுப்பப்படுகின்றது.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-4 copy

Related posts:

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பது இதற்காகத்தான் – கூறுகிறார் டக்ளஸ் எம்.பி.!