இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Tuesday, December 6th, 2016

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும்,நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு கல்வியில் மட்டுமல்லாது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் முன்னேற்றம் காணவேண்டுமென்பதே எனது பெருவிருப்பாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக மாணவர்கள் தம்மை தயார்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அசௌகரியங்களையோ, இடையூறுகளையோ ஏற்படுத்தாமல் அதற்கான ஏதுநிலையை பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்;.

எதிர்காலத்தை மாணவர்கள் திடமான நம்பிக்கையுடனும்,தைரியத்துடனும் எதிர்கொண்டு,வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதுடன்,எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் கல்வியை மகத்தான செல்வமாக மாணவச் செல்வங்கள் உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். அப்போது தான் வாழ்வில் மேம்பாடு காணமுடியும்.

க.பொ.தசாதாரணதரப் பரீட்சைஎன்பதுமாணவர்களுக்கானமுக்கியகட்டங்களில் ஒன்றாகஅமைந்துள்ளபடியால்,மாணவச் செல்வங்கள் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பரீட்சைக்குத் தோற்றிஅவர்தம் இலட்சியக் கனவுகளைஈடேற்றும் உயர்ந்தஎண்ணத்துடன் பரீட்சையைஎதிர்கொள்வதற்குதிடசங்கற்பம் பூணவேண்டும்.

முன்னொரு காலகட்டத்தில் கல்வித்துறையில் பெயர்பெற்று விளங்கிய வடமாகாணம் அழிவுயுத்தம் காரணமாக பின்னானகாலங்களில் பாரியபின்னடைவுகளை எதிர்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய அவலத்தையும் சந்தித்திருந்தது.

இன்று அழிவுயுத்தம் மௌனித்துள்ள நிலையில் நடைபெறவுள்ளக. பொ.தசாதாரண தரப்பரீட்சையை இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் வகையில் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும் ,நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு கல்வியில் மட்டுமல்லாது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் முன்னேற்றம் காணவேண்டும்.

அந்தவகையில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துமாணவச் செல்வங்களுக்கும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
காங்கேசன்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் த...
கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரத...

நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!
மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் – புதுவருடப்பிறப்பு தொடர்ப...