இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள்!

Sunday, January 31st, 2021

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவிக்கான வெற்றிடத்தை நிவர்த்தி செய்து கொடுத்ததற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு வடபிராந்திய போக்குவரத்து ஊழியர்கள் அணிதிரண்டு வந்து தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்திற்கு இன்று காலை அணிதிரண்டுவந்த வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய சாலைகளின் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு ஒன்றுதிரண்டுவந்து அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேவைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது எமது கடமை. அந்த தீர்வை மக்களுக்கானதாக நேர்மையான இதய சுத்தியுடன் செயற்படுத்துவது உங்கள் அனைவரதும் கடமையாகும்.

அந்தவகையில் தற்போது குறித்த பதவிக்கான நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக வடக்கு போக்குவரத்து சாலைகளிலுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் விரைவாக தீர்வுகாணப்பட்டு சிறப்பான சேவையை மேற்கொள்ள அனைவரும் முரண்பாடுகளற்ற வகையில் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக வடக்கு மாகாணத்தில் நீண்ட கால வெற்றிடமாக இருந்துவந்த இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவிக்கான வெற்றிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக  வடபிராந்திய போக்குவரத்து சபையின் குறித்த வெற்றிடம் நிரப்பப்படாமையால் வெளி மாவட்டங்களிலிருந்த அதிகாரிகளே குறித்த பதவிக்கு தற்காலிகமான பதில் கடமைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்தால் இதுவரைகாலமும் நியமிக்கப்பட்டுவரும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்கவரத்து சாலைகளின் நிர்வாகத்தினரிடையே பல்வேறு முறைகேடுகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வருவதாகவும் பலர் பழிவாங்கப்படும் நிலைக்கு தள்ளப்ட்டுவந்த நிலையும் காணப்பட்டதாகவும் குறித்த சாலைகளின் ஊழியர்களிடமிருந்து பரவலாக குற்றச்சாட்டுக்கள எழுந்துவந்திருந்தன.

இந்நிலையில் வடக்கு மாகாண சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இது தொடர்பில் முறையிட்டு வந்ததுடன் குறித்த பிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடத்தை நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஊழியர்களது கோரிக்கையின் நியாயத்தன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சியின் காரணமாக வடபிராந்தியத்தை சேர்ந்த செல்லத்ததுரை குணபாலசெல்வம் வடக்கு மாகாண பிராந்திய முயகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் தொடர்பில் வடக்கு பிராந்திய போக்குவரத்து ஊழியர்களது கருத்து தெரிவிக்கையில் –

நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு தற்போது அமைச்சரின் முயற்சியால் தீர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதுமட்டுமல்லாது பழிவாங்கல்ககளால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்களுக்கு விமோசனமும் இதனூடாக கிடைக்கும் என்றும் தெரிவித்ததுடன் ஒருசில அதிகாரிகளின் துஷ்பிரயோகங்களும் மோசடிகளும் விரைவில் வெளிவர சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதனூடாக வடபிராந்தி போக்குவரத்து சபை நிர்வாகத்தில் ஓர் உத்வேகத்தடன் கூடிய சுமுகமான நிலை உவுவாகியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.

Related posts:

வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை -  டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட...
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...
நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – ...