இலங்கை தமிழர் தொடர்பாக சர்வதேச தளத்தில் இந்தியாவின் பரிந்துரை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் கிளிநொச்சியில் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021

கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16.03.2021) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றியபோது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வானது இலங்கை,இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்பதனூடாகவே சாத்தியப்படுத்த முடியும் என்பதே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எமது நிலைப்பாட்டையே ஐக்கிய நாடுகள் எனும் சர்வதேச தளத்தில் இந்தியாவும் இன்று வெளிப்படுத்தியுள்ளது.

எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் இந்தியாவின்  இலங்கைத் தமிழரின் அரசியல் தீர்வு தொடர்பான வலுவான நிலைப்பாடாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், அதை வரவேற்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தனது உரையில் கிளிநொச்சி பிறம்மந்தனாறு பகுதியில்  சமுர்த்தி பயனாளர்களால் முன்னெடுக்கப்படும்

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும், உற்பத்திசார் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்றவகையிலும் அர்த்தபூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related posts: