இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாவையிட்டார்!

Wednesday, December 26th, 2018

புதிதாக கட்டுமாணம் செய்யப்படும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேர் வேலைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் காரணமாக முற்றாக அழிந்துபோன மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேரை யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் கட்டுமாணம் செய்ய முயற்சிக்கப்பட்டபோது பல இடையூறுகளால் அது தடைப்பட்டுப் போயின.

குறித்த விடயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் கொண்டுவந்ததை அடுத்து புதிய தேர் கட்டுமாணப் பணிகளுக்கு தடையாக இருந்த காரணிகளை துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று அவை சீர் செய்யப்பட்டு மீண்டும் தேர் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் காணப்படும் ஆலயங்களில் அதி உயரமான சிற்ப தேராக சுமார் 45 அடி உயரமுடையதாக சிற்ப வடிவமைப்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் தற்போது கட்டுமாணம் செய்யப்பட்டு நிறைவு நிலையை அடைந்துள்ளது.

குறித்த தேரின் நிறைவு பணிகளை இன்றையதினம் பார்வையிட்ட செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்டுமாணப் பணிகளை பூரணப்படுத்தவதற்கான மேலதிக உதவிகளையும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

இலங்கையின் புகழ் பூத்த கொழும்பில் வாழும் சிப்பாச்சாரியாரான கந்தசாமி இலங்கேஸ்வரன் அவர்களின் கைவண்ணத்தில் புதுப் பொலிவுடன் குறித்த சிற்பத்தேர் கட்டுமாணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5 3 2 4 7 9 10 1 6 11

IMG_20181226_120323

Related posts:

மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்-...
மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...

இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...