இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018

இந்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்கு இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 155 ரூபாவாக இருந்த நிலையில், 4774 பில்லியன் ரூபாவாக இருந்து, அமெரிக்க டொலருக்கு நிகரான எமது ரூபாவின் பெறுமதி 157 ரூபா வரையில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக 6160 பில்லியன் ரூபாவினை எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.

முதலீடுகளைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அதாவது உற்பத்தி மற்றும் சேவைத்  தொழிற்துறை சார்ந்து சுமார் 397 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டுத்துறை சார்ந்து கூமார் 353 மில்லியன் அமெரிக்க டொலர்களும் முதலீடுகாளக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலவும் வெளிப்பற அபாயக் காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் உயரிய கடன்படு நிலைமையினையும் சுட்டிக்காட்டி, மூடிஸ் முதலீட்டு நிறுவனம் கடந்த டிசெம்பர் மாதம் வெளியிட்டிருந்த இலங்கையின் கடன் தரப்படுத்தல்கள் தொடர்பான அறிக்கையில்,  இலங்கையின் கடன் நிலை B1  என தரப்படுத்தப்பட்டிருந்தது. இது, எதிர்மறையான பேறுபேற்றைக் கொண்டதாகும்.

இந்த நிலைமையானது இந்த வருடத்தில் சாதகமான வாய்ப்பினை பொருளாதார ரீதியில் எமது நாட்டுக்கு கொண்டு தரப் போவதில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்தத் தரப்படுத்தல்கள் இலங்கையின் கடன் கோரல் செயற்பாடுகளிலும் கட்டாயமகாத் தாக்கங்களைச் செலுத்தக்கூடும்.

எமது நாட்டின் பணவீக்க நிலையும் எதிர்பார்ப்பு அடைவு மட்டத்தினை அடையாத நிலையே காணப்படுகின்றது. கடந்த டிசெம்பர் மாத்தைப் பொறுத்தவரையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியானது 7.6 வீதமான பணவீக்கத் தன்மையைச் சுட்டிக்காட்டியுள்து என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர பொறுப்பு சட்டமூலம், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமயமாக்கல் சட்டமூலம், வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்-...
கனகராயன்குளம் பகுதி பொதுஅமைப்புகள் தமது பிரதேச பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...