இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 23rd, 2016

தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாம் இலங்கையர் என்ற அடையாளத்தை இழக்கவோ அதேநேரம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ விரும்பவில்லை. தமிழ் மக்கள் தமிழர்களாகவும் அதேநேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகின்றனர் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். அதேநேரம் எமது இனப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பிலான  அரசியல் தீர்வு குறித்து கௌரவ பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகளையும் அது தொடர்பில் காட்டுகின்ற அக்கறையையும் நான் வரவேற்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம்(21) 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

எமது மக்களின் காணிகள் பல இன்னமும் அம்மக்களுக்கு வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இந்த நாட்டில் தற்போது தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அத்தேவைகளுக்காக அரச காணிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், எமது மக்களின் வாழ்விடங்களையும் வளமான விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த நிலங்களையும் விடுவித்து எமது மக்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும் என்று இங்கு நான் கேட்டுக் கொள்கின்றேன்  என மேலும் தெரிவித்துள்ளார்.

 15

 

 

 

Related posts:

பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும்; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் - மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !
நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...