இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைமைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

சமகால நிலவரங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
குறிப்பாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பாக உதவி உயர்ஸதானிகருக்கு தெளிவுபடுத்திய கடறறொழில் அமைச்சர், கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் குறித்த விமான நிலையம் திறக்கப்படும் எனவும் இந்திய நிதியுதவியுடன் அடுத்த கட்ட புனரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|