இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!

Wednesday, November 29th, 2023

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல்  இன்று (29.11.2023) மாளியாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது..

முன்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்றையதினம் கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று முற்பகல் விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் அங்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது குறிப்பாக இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கடற்றொழில்துறையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: