இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிகிறது!

Wednesday, December 6th, 2017

இரு மொழிகள் அமுலாக்கம் என்பது இந்த நாட்டில் எழுத்து மூல ஆவணமாக வைத்துப் பாதுகாக்கப்படுகின்றதே அன்றி, அரச அலுவலகங்களில் செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிய வருகின்றது- என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது பகுதிகளில் கடந்த அசாதாரண காலகட்டத்திலிருந்து, பல்வேறு அரச துறைகள் சார்ந்த பணிகளில் ஆளணிப் பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருந்த நிலையில், தொண்டர் ஆசிரியர்களாக, சுகாதாரத் தொண்டர்களாக என அன்றிலிருந்து, இன்றுவரையில் எவ்விதமான ஊதியங்களும், சலுகைகளும் இல்லாத நிலையில் பணிபுரிந்து வருகின்ற பலர் தகைமைகள் இருந்தும், அனுபவம் இருந்தும் அரச நிரந்தரப் பணிகளில் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதொரு வியடமாகும என்று தேரிவித்துள்ளர்.

003

Related posts:

வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் - நாடாளுமன்றில் ட...
 ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது -  எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...