இரு தரப்பு மக்களும் சம நிலையில் வாழும் சூழல் உருவாக்கப்டுவதனூடாகவே நாட்டில் இன நல்லிணக்கததை உருவாக்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016

தேசிய நல்லிணக்கம் என்பது எமது நாட்டு மக்களிடையே உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.  வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, அலுவலகங்களை அமைத்து, பிரச்சாரங்களை மேற்கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டி, நாங்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தகின்றோம் என்று கூறிக் கொண்டிருப்பதால் மாத்திரம் எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டு விடப்போவதில்லை – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் உணர்வுபூர்வமான பல கொள்கைகளை முன்வைத்தும், முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். எனவே, இதனை உணர்ந்து ஏனைய அனைத்துத் தரப்பினரும் செயற்பட்டால்தான் இந்த தேசிய நல்லிணக்கத்தை எமது நாட்டில் வலுவுள்ளதாகவும், நிலையானதுமாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தேசிய நல்லிணக்கம் என்பது எமது நாட்டு மக்களிடையே உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.  வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, அலுவலகங்களை அமைத்து, பிரச்சாரங்களை மேற்கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டி, நாங்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தகின்றோம் என்று கூறிக் கொண்டிருப்பதால் மாத்திரம் எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

நீண்ட காலமாக ஆயுத மோதல் நிலைமையில் சிக்குண்டு இருக்கின்ற எமது நாட்டின் இரு தரப்பு மக்களும், சம நிலையில் ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாகப் புரிந்து கொண்டு, இணைந்து செயற்படுவதற்கும், இணைந்து வாழவும் அடியெடுத்து வைப்பதற்கான சூழலை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையே உண்மையான தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன்.

எனவே, இந்தச் செயற்பாடுகளை உளப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டுமே ஒழிய, மூளைச் சலவைகளால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைப்பது, இரு தரப்பு மக்களைப் பொறுத்த வரையில், அது தோல்வியிலேயே முடியும் என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

006

Related posts:

சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட ...
ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...