இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

இரணை மாதா நகர் பகுதிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் முகமாகவே டக்ளஸ் தேவானந்தா இரணை மாதா நகர் பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக குறித்த பகுதி மக்கள் மீள் குடியேற்றம், கடற்றொழிலிலீடுபடுவது மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களது பிரச்சினைகளை நேரில் சென்று ஆராயும் முகமாகவே இன்றையதினம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இரணைமாதா நகர் மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்தபின்னர் இரணைதீவுக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளையும் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருத்தில் எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!
|
|