இரணைமடு “நெக்டா” நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியஜம்!

Sunday, December 29th, 2019

இரணைமடு குளத்தை அண்டிய செயற்கை முறையிலான நன்னீர் மீன் உற்பத்தி நிலையமான தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நன்னீர் நிலைகளை மையமாகக் கொண்டு சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சித் திட்டங்களை அமைச்சர் முன்னெடுத்துவரும் நிலையில் வடபகுதியி. மிகப்பெரும் நன்னீர் நிலயான இரணைமடு பகுதிக்கு சென்றிருந்த அவர் செயற்கை முறையிலான் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

மேலும் உற்பத்திக்கான நீர் நிலைகளையும் அதற்கான சாதக பாதக நிலைகளையும் ஆரய்ந்தறிந்த அமச்சர் அவற்றுக்கான மேம்படுத்தல் தொடர்பில் கருத்திட்டங்களையும் முன்வைக்குமாறு துறைசார் அதிகாரிகளிடம் கோரியிருந்தார்.

Related posts: