இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, March 5th, 2021

கொரோனாவால் உயிரிழந்தோரின் ஜனாஸாக்கள் இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

முன்பதாக குறித்த ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில் கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்றும் அத்துடன் கொறோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் ஜனாஸாக்கள் இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரியிருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில் குறித்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 ஜனாஸாக்கள் புதைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்த இருவரின் ஜனாஸாக்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சூடுபத்தினசேனை பகுதியில் கொவிட்-19 ஜனாஸாக்கள் புதைப்பதற்கு இலங்கை சகாதார அதிகாரிகளால் அனுமதிக்கப்படடுள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டு ஜனாஸாக்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் மேலும் மூன்று ஜனாஸாக்கள் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் - யாழ். மாவட்டசமாச சம்மேளனப் பிரதிநிதிகள் டக்ளஸ் த...
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - நாடாளுமன்றில டக்ளஸ...
நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந...

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் - ...
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது - அமைச்சர் டக்ளஸிற்கு காணி ...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாட...