இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் – டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2017

இரணைதீவு மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது மட்டுமன்றி சொந்த இடங்களில் அவர்களது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்தறிவதற்கு விரைவில் இரணைதீவுக்கு வருகைதரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார்

வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றையதினம் (13) இடம்பெற்ற டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி பூநகரி இரணைதீவை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்துவந்த மக்கள் 1992 ஆம் ஆண்டு 225 குடும்பங்களாக அங்கிருந்த இடம் பெயர்ந்தவர்கள் தற்போது 396 குடும்பங்களாகவும் அதில் 60 பெண்களை தலைமைத்வமாக கொண்ட குடும்பங்களாகவும் இரணைமாதா நகரில் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மக்கள் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு வருகைதந்து தாம் மீண்டும் சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கும் தொழில்துறைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

அம்மக்களையும் அழைத்துக்கொண்டு ஆளுநர் அலுவலகத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் இரணைதீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆளுநரிடம் கொடுப்பதற்கும் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மகஜரை பெற்றுக்கொண்டபின் கருத்து தெரிவித்த ஆளுநர் தாம் நேரில் இரணைதீவுக்கு வருகைதந்து மக்களின் மீள்குடியேற்ற மற்றும் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Related posts: