இரணைதீவில், மீன்பிடிக்கவும், பண்ணைகளை அமைக்கவும் விதிக்கப்பட்ள்ள தடை நீக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016

கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைதீவுப் பகுதியில் தற்போது அங்குள்ள சிறிய தீவில் கடற்றொழிலில் ஈடுபட கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பெரிய தீவிலும் இத் தொழிலாளர்களுக்கு தொழில் செய்யக்கூடிய வசதிகளையும், கால்நடைகளுக்கான பண்ணைகளை அமைப்பதற்கான எற்பாடுகளையும் செய்து கொடுப்பதுடன், அப்பகுதியில் குடியேற விரும்பும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் செய்து கொடுக்குமாறு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் பொது மக்களின் வீடுகள் சில விடுவிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்தும் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அப்பகுதியிலுள்ள ஏனைய எமது மக்களின் காணிகளையும், குறிப்பாக அப்பகுதியில் அமைந்துள்ள சூரிபுரம் பொது மயானத்தையும், அதே போன்று பறவிப்பாஞ்சான் காணிகளையும் படிப்படியாகவேணும் விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், குறிப்பாக எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய வகையில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-2 copy

Related posts:


நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு - பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!