இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, May 17th, 2019

உள்ளூராட்சி மன்றங்களில் எமது கட்சியின் சார்பான பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி பொறுப்புமிக்க எதிர்த்தரப்பினராக இருந்து செயற்படுவதனூடாகவே மக்களது பிரச்சினைகளுக்கும் அவர்களது  தேவைப்பாடுகளுக்கும்  இயலுமானவரை தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் நல்லூர் பிரதேசத்தின் ஆலோசனை சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது –

கடந்தகாலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது மக்களுக்கான தேவைப்பாடுகளை இலகுவான முறையில் பெற்றுக்கொடுக்க முடிந்திருந்தது. ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை. ஆனாலும் உள்ளூராட்சி மன்றங்களினூடாக பல்வேறு மக்கள் நலன்சார் அபிவிருத்திகளை முன்னெடுத்துச்செல்ல முடியும்.

வடபகுதியில் அநேக உள்ளூராட்சி மன்றங்களில் நாம் ஆராக்கியமான எதிர்த்தரப்பினராகவே செயற்பட்டு வருகின்றோம். அந்தவகையில் நாம் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைப்பாடுகளையும் இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை முடியுமானளவு பெற்றுக் கொடுக்க உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

யாழ் - பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!
முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்...