இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது – நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே குறித்த விடயத்தினை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை தன்னோடு இணைந்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெர...
வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் த...
|
|