இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 18th, 2016

தற்போதைய நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது தேசிய நல்லிணக்கத்திற்கு பதிலாக இனங்களுக்கிடையே விரிசல் நிலையே அதிகரித்து வருவதை உணரக்கூடியதாக இருக்கிறது. இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகள் எங்கிருந்து வந்தாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றது கிடையாது என நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கென 180 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடளாவிய ரீதியில் இச் செயற்பாடுகள் இதுவரை எத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை அளவிட முடியாமல் உள்ளது.

இதற்கு உதாரணமாக அண்மையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவத்தை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனது அரச கடமையை ஆற்ற முனைந்த ஒரு தமிழ் கிராம சேவையாளர் மீது மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள் இனவாத வார்த்தைகளால் மிகவும் அநாகரீகமான முறையில் திட்டிதீர்த்கிருக்கிறார்.

பெளத்த மதத்தின் உண்மையான போதனைகளுக்கு மாறாக அதன் புனிதத்தன்மையை களங்கப்படுத்தும் வகையில் மட்டுமன்றி தேசிய இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவுமே அவரது செயற்பாடு அமைந்திருக்கிறது.

இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிரான செயல்கள் எந்த தரப்பில் இருந்து வந்தாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்பவர்கள் அல்ல. நாம் விரும்பும் இன நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலும் அல்ல. ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தவர்கள் சார்பில் யாரும் மேலாண்மை செலுத்துவதும் அல்ல.  ஆகவே இது போன்ற நிலமைகளை இந்த அரசு மாற்றியமைக்குமென நான் எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் தேசிய நீரோட்டத்திற்கு வந்தது முதல் இன்று வரையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்திற்காகவும் தேசிய நல்லிணக்கத்தை வலுமிக்கதாகக் கட்டியெழுப்புவதற்காகவும் அயராது உழைத்து வருகின்றோம். அவ்வாறு எம்மால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடிந்தளவுக்கு தற்போதைய நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகத் தெரிய வரவில்லை என்பதை நான் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

02

Related posts:

கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர்  - வவுனியாவில் டக்ளஸ்...
சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்...